TamilPage

HomePage :: PageIndex :: RecentChanges :: WikiFarms :: UserSettings :: You are 38.103.63.61
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே.

நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன் குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன் குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம் ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன் அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.